Pages

Monday, June 4, 2012

அல்-காய்தா, தலிபான் பற்றிய இலங்கையின் தடை சட்டம் - ஒரு பார்வை

Abu Sayyaf - 04/06/2012 : இலங்கை பாராளுமன்றத்தில் அல்-கைாயிதா, லஷ்கர், தலிபான் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களை தடை செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி அமைப்புக்கள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனும் அடிப்படையிலேயே சுட்டப்பட்டுள்ளன. தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், குழுக்கள் போன்றவை இதில் அடங்கும்.

உலக ஒழுங்களில் இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று இலாஹியத். மற்றையது தாகூத்தியத். அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, சீனா, இந்தியா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும் தாகூத்திய சக்திகளே ஆட்சியில் உள்ளன. இலங்கையை எடுத்துக்கொண்டாலும் “இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பு சட்டமே சட்டவாக்கம் பெற்றுள்ளது. அந்த வகையில் இங்கும் ஒரு தாகூத்திய ஆட்சியே நடைபெறுகிறது. இதில் இவ்வாறான சட்டங்கள் உருவாவதில் வியப்பேதுமில்லை.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் அல்காய்தா, லஷ்கர் செயற்படுகின்றன அல்லது தங்கு தளமாக பாவிக்கின்றன என அண்மை காலங்களில் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. அதனை இலங்கை பாதுகாப்பு செயளர் உறுதிபட மறுத்தும் இருந்தார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு கருதி அதே எச்சரிக்கை இப்போது சட்டமாக மாறவிருக்கிறது.

ஒரு தன்னிறைமையுள்ள நாட்டில் சட்டவிரோத ஆயுத உபயோகம் என்பதோ, ஆயுத செயற்பாடுகள் என்பதோ ஏற்புடைய ஒன்று அல்ல. அந்த வகையில் இலங்கை அரசின் முடிவை மறுதலிக்கவோ, விமர்சிக்கவோ முடியாது. அநத வகையில் இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும். அதன்படி ஒழுக வேண்டும். இந்த நாட்டை வேற்று நாட்டவர்கள் தளமாக பாவிப்பார்கள் ஆனால் அது அவர்களுடைய பிரச்சனை. அவர்களை இந்த நாட்டின் பாதுகாப்பு துறை வழங்கப்படும் கட்டளைகளிற்கு ஏற்ப கையாளும்.

பிரச்சனை அதுவல்ல. இலங்கையில் உள்ள பௌத்த மதவாத சக்திகள், சிங்கள இனவாத சக்திகள், இலகுவாக முஸ்லிம்களை பயங்கரவா முத்திரை குத்த இது வாய்ப்பாகிவிடும். இனவாதம் என்பது இன்று அரச நிர்வாக, அரசியல், காவல் போன்ற பல துறைகளிலும் தனது கிளைகளை விரித்துள்ளது. ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதனால் வகை தொகையற்ற முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் துர்ப்பாக்கிய நிலை எழலாம்.

இலக்கு வைக்கப்பட்ட மஸ்ஜித்களை, அல்காய்தாவின் மையம் எனும் குற்றச்சாட்டில் மூட முடியும். மத்ரஸாக்களை லஷ்கரின் பயிற்சி பாசறை என பிரச்சாரம் செய்ய முடியும். தாடியும், தோப்பும் போட்ட ஒரு முஸ்லிமை ஜிஹாதியாக முத்திரை குத்த முடியும். இந்தியாவின் தடா, போட்டோ போன்ற சட்டங்களையொத்த நிலைமைகள் இங்கு உருவாக முடியும். இதனால் இலங்கை முஸ்லிம்கள் பல இன்னல்களை சந்திக்கலாம்.

இலங்கையை வளமான, ஆசியாவின் அதிசயமாக மாற்ற எண்ணியுள்ளார் இந்த நாட்டின் ஜனாதிபதி. ஆயுத கலாச்சாரமற்ற நாடாக மாற்ற கடுமையாக உழைக்கின்றார் பாதுகாப்பு செயளர். இவர்களது எண்ணங்கள் சிறப்பானவை. ஏற்றுக்கொள்ளத்தக்கவை. இப்படியான மனிதர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமாக வரும் தகவல்கள், அழுத்தங்கள், செல்வாக்குகள் போன்றவற்றை நிதானமாக, தீர்க்க சிந்தனையுடன் ஆராய்தல் வேண்டும். நிகழ்வின் முன்புலம், பின்புலம் பற்றிய துல்லியமான தகவல்களை வைத்தே  முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.

இனவாதிகள் சில குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி அதனை முஸ்லிம்கள் மேல் போட்டு விட்டாலே போதும். அவர்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டுவிட. எப்படி தன்னிறைமைக்கான பாதுகாப்பு முக்கியமோ, அதே போன்றே முஸ்லிம்கள் பற்றிய முடிவுகளும், அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் எடுக்கப்படல் வேண்டும். வெளிநாட்டு சக்திகளின் அறிவுருத்தல்களை ஒரு தகவலாகவே உள்வாங்க வேண்டுமே அன்றி கட்டளையாக அல்ல.

இலங்கையின் வளற்சியில் முஸ்லிம்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். தியாகங்கள் செய்துள்ளனர். எப்போதும் சமாதனத்தையே விரும்பும் இனம் இலங்கை முஸ்லிம்கள். அவர்களது வாழ்வியல் வட்டம் இயல்பானது. அமைதியானது. அது யாரையும் குழப்புவதல்ல. இதனை அரசு தெளிவாக புரிந்து கொள்ளல் வேண்டும். ஒரிரு இடங்களில் சில பாரிய தவறுகள், குற்றங்கள் நிகழலாம். அதனை சரியாக இனங்கண்டு தண்டிக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் இவ்வாறான சட்டங்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களை அடிமை சமுதாயமாக மாற்றவன்றி, இந்நாட்டினுள் சட்டவிரோத செயல்களை புரியும் அமைப்புக்களையும், தனி நபர்களையும் மட்டும் கட்டுப்படுத்துவதாக அமைதல் வேண்டும். அதற்காக இந்த நாட்டின் முஸ்லிம்கள் அரசிற்கு ஆதரவளித்து துணை நிற்பர் என்பது உறுதி.

No comments:

Post a Comment