House of Representatives' Republicans. பிரதிநிதிகள் குடியரசு சபை. அமெரிக்க அரசின் உத்தேச தீர்மானங்களிற்கு அங்கீகாரம் அளிக்கும் உயர் மையம். இஸ்ரேலிய அரசின் Iron Dome Missile System எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உத்தேசித்துள்ளது. இந்த கடன் திட்டமானது 2015 ஆம் ஆண்டினை இலக்காக கொண்டு இஸ்ரேலிய அரசின் ஏவுகணை அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு செயற்திட்டம் நிறைவு செய்யப்படும் வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
டெல் அவிவ்வின் கோரிக்கையிற்கு இணங்கவே வாஷிங்கடனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. “இரும்பு கூரை” என இஸ்ரேலியர்களினால் பெருமிதமாக வர்ணிக்கப்படும் இந்த பொறி முறைக்கு மேலும் நான்கு பேட்டறிகளை இணைப்பதன் மூலம் குறுந்தொலைவு ஏவுகணைகளை முற்றாக கட்டுப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு நம்புகிறது.
கடந்த ஆண்டின் அமெரிக்க அரசின் வரவு செலவு திட்டத்தில் இஸ்ரேலிற்கான உதவி வெகுவாக குறைக்கப்பட்டிருந்தன. இதனை ஒபாமா ஒரு முறை சுட்டிகாட்டி பேசியிருந்தார். இஸ்ரேலிய அரசின் பாதுகாப்பு பற்றியும், அதற்கான தேவைப்பாடு பற்றியும் அவர் கருத்து கூறியிருந்தார். இவரது கருத்துக்களை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனேட்டா உறுதிப்படுத்தி தனது பங்கிற்கு இஸ்ரேலிய நலன்கள் பற்றி பேசியிருந்தார். இவர்களின் கூற்றிற்கு இணங்க பென்டகனால் முன்மொழியப்பட்ட ஆயுத உதவி திட்டத்தின் முக்கியமான ஆலோசனையே இந்த அயன் டோம் மிசைல் செக்யூரிட்டி சிஸ்டம்.
ஹமாஸினதும், அல் அக்ஸா பிரிகேட்டினதும், தற்கொலை தாக்குதல் எனும் போராட்ட முறைமை “கயூட்சா குறுந்தொலைவு ஏவுகணையாக” பரிணாமம் பெற்றதன் பின்பு இஸ்ரேல் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. அது கட்டும் உருக்கிலான தடுப்பு சுவரையும் தாண்டி இந்த ஏவுகணைகள் வந்து இஸ்ரேலிய தெருக்களில் வீழ்ந்து வெடித்து விடுகின்றன. போதாததற்கு அண்மைகாலமாக லெபனானனை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் தோளில் சுமந்து சென்று தாக்கும் மற்றும் பிக்அப் வாகனங்களில் பொருத்தி தாக்கும் ரஷ்ய தயாரிப்பான “மல்டி பரல் ரொக்கேட் லோஞ்சிங் சிஸ்டம்” எனும் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்ததன் உடனடி விளைவே இந்த அமெரிக்க அயன் டோம் மிசைல் செக்கியுரிட்டி எய்ட்ஸ் எனும் உதவிகளாகும்.
யூதர்கள் தங்களை காப்பாற்ற உருக்கு சுவரமைத்தனர். இப்போது அயன் டோம் அமைக்கின்றனர். ஆனால் அல்லாஹ் விதித்தவாறு இவர்கள் ஓழியும் மரம் வரை முஸ்லிம்கள் இவர்களை தாக்கி கொண்டே இருப்பர்...
நல்ல பதிவு தொடருங்கள்
ReplyDelete