மேற்படி தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் கட்சி செயற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் அதிகாரமிக்க தலைவர்களிற்கும் “ஜெனீவா” விவகாரத்தில் முஸ்லிம்கள் மேல் ஏற்பட்ட நெருக்கமும், அமெரிக்க குற்றவியல் பிரேரணைக்கு எதிராக கிளந்தெழுந்த முஸ்லிம்கள் பற்றிய சிங்கள மக்களின் நல்லெண்ணமும் தான் மேற்படி நிகழ்வுகளிற்கு முக்கிய காரணம்.
இன்றைய அரசின்பால் முஸ்லிம்கள் நெருங்கி செல்வதை தடுக்கவும், அதிகார அரசின் மேல் முஸ்லிம்கள் காழ்ப்புணற்ச்சி கொள்ள வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த செயல் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது. தங்களது வாக்கு வங்கியின் கடைசியிருப்பே முஸ்லிம்கள் தான். அவர்களும் மெல்ல ஆளும் கட்சி பக்கம் சாய்ந்தால் தங்கள் எதிர்கால அரசியல் கேள்வி குறியாகிவிடும் எனும் எண்ணத்தில் இதை செய்து முடித்துள்ளது மேற்படி அரசியல் கட்சி.
இலங்கையின் தென்மாகாணத்தை சார்ந்த தனது தொண்டர்களை கொண்டு வந்து முஸ்லிம் பள்ளிவாசலுடன் முரண்பாடுகளை கொண்டு, தங்கள் அரசியல் கட்சியின்பால் நெருக்கமுடைய சிங்கள நாயக்க ஹாமத்துருவின் துணையுடன் இதனை செய்து முடித்துள்ளனர். முஸ்லிம்கள் மீது இனவாதத்தை விதைக்கும் சக்திகள் இவர்களுடன் துணைநின்று தங்கள் இலக்குகளை அடைய முற்பட்டமை தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
தஃவா என்ற பெயரில் எப்.எம். நடாத்தும் நாம், அதே தஃவா என்ற பெயரில் எப்.எம். நடாத்தும் பௌத்த அமைப்புக்கள், பன்சலைகள் பற்றி கவலை கொள்வதில்லை. வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் முற்றுகை பற்றி அதற்கு முதல் நாளே இவர்களின் வானொளிகள் முழங்கியுள்ளன. இதை நாம் கருத்திலோ கவனத்திலோ பெரிதாக எடுக்கவில்லை.
ஆளும் அரசின் அமைச்சரான ஜனக பண்டார தென்னகோன் முஸ்லிம்கள் விடயத்தில் பல உதவிகளை செய்துள்ளார். இப்போதும் முஸ்லிம்களிற்கான மாற்று திட்டம் பற்றிய விவாதங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கி வருகிறார். நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயளர் போன்றவர்களும் இந்த விடயம் தொடர்பாக வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளனர்.
முஸ்லிம் இணையங்கள் இந்த விவகாரத்தில் கவனமாக செயற்படல் அவசியம். பிரேக்கிங் நியூஸ்களை அள்ளி வழங்கி சமூகத்தை அச்சப்பட வைப்பதும், நிகழ்ச்சி நிரலின் பின்புலங்களை புரியாமல் செய்திகளை வெளியிடுவதும் சிறப்பான விடயமல்ல.
எம் மஸ்ஜிதுகளை முற்றுகையிடுவது இப்போது வழமையாகி போய் விட்டது. ஹாமத்துருக்களை முன்னிருத்தி அவர்களின் பின்னால் கலகக்காரர்களும், இனவாதிகளும் அணிவகுப்பது தான் இப்போது புதிய ஸ்ரென்ட். நன்றாகவே வோர்க் அவுட் ஆகிறது. பாய்ந்து வரும் குழப்பக்காரர்களை தடுத்து நிறுத்த முடியாத நிலை. முயன்றால் கதை வேறு வடிவம் பெற்று விடும். சிங்கள மதகுருக்களை முஸ்லிம்கள் தாக்கினர் என பிரச்சாரம் பண்ணி நாடெங்கும் கலவரதை மூட்டுவர். நிதானம், அவதானம் என்பவை இங்கு பிரானமாக கைகொள்ளப்பட வேண்டியவை.
ஆட்சி, அதிகாரம், சட்டம், ஒழுங்கி, நீதி, காவல் போன்ற பல கட்டுமாணங்களை தன்வசம் வைத்துள்ள அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து அனுமதிப்பதனால் முஸ்லிம்கள் இந்த சட்டவாக்க அமைப்புக்களில் நம்பிக்கையிழக்கும் துர்பாக்கிய நிலை உருவாகலாம். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுவதும், சட்டம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் இனவாத சக்திகளை இலங்கையில் ஒரு “குஜராத்தை” உருவாக்க துணிவுகொள்ள வைக்கும்.
இலங்கையின் முஸ்லிம் உம்மா இந்த விடயத்தை இறைவனிடம் உணர்வுபூர்வமாகவும், அரசாங்கத்திடம் அறிவுபூர்வமாகவும் முறையிடல் வேண்டும். உலகம் முழுதும் முஸ்லிம் உம்மா படும் அல்லல்களும் அவலங்களும் ஏராளம். அவற்றில் ஒரு முகவரி தம்புள்ளையில் எழுதப்பட்டுள்ளது. பொளத்த பேரினவாம் சொல்ல நிணைக்கும் செய்தி பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. ஆனால் நாம் இந்த நிகழ்வுகளில் இருந்து ஒரு செய்தியை கற்றுக்கொண்டுள்ளோம். அது தான் எம்மை இறைவன் மட்டுமே காப்பாற்றுவான் என்பது. அப்படியானால் நாம் இறைவன் சொன்னபடி மட்டுமு வாழ்தல் வேண்டும். இது சிம்பிள் லொஜிக். இறைவன் சொன்னபடி எப்படி வாழ்வதென்பதை அவசராமாக ஆராய்வோம். தயாரா?
No comments:
Post a Comment